சுமார் 8 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!
பெண்களினது அழகு ஆபத்துதான் அது அந்த பெண்ணுக்கு மாத்திரமில்லை ஆண்களுக்கும்தான் 8பேரை திருமணம் முடித்து ஏமாற்றிய பெண் இலங்கையில்!
இத்தாலி, கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தங்கொட்டுவ, மாவத்தகம பகுதியை சேர்ந்த சுமார் 35 வயதுடைய பெண் ஒருவரே மாறவில பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் கம்பளை, காலி, மாத்தறை, மஹவெவ, வென்னப்புவ, மாறவில, பிங்கிரிய பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதுடன் போலி திருமணம் செய்தும் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments