இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை என பிரித்தானியாவில் தமிழ் உணர்வாளர்கள் ஆர்ப்பரிப்பு! !

2019/02/04 அன்று பிரித்தானியாவில் அமைந்துள்ளஇலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்பாக தமிழ் உணவாளர்கள் TGTE, TCC என பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் ஆயிரக்கணக்கானோர் அணி திரண்டு. இலங்கையின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை பேரினவாத அரசுக்கும் சர்வதேசத்திற்கும் இது எமது சுதந்திரதினம் அல்ல, இது எமக்கு கரி நாள், என பல்வேறு வாசகங்களை இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் புரியும் வண்ணம் உணர்வெளிச்சியுடன் பல பதாதைகள், கோசங்கள் மூலம் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள் 

மேலும் குகன் ,வாகிசன் ,திசோகாந்த் விதுசன் ஆகியோர் தமது கருத்தினை இவ்வாறு தெரிவித்தனர்....

04 Feb 2018 அன்று அமைதிவழிப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்த Brigadier Priyanka Fernandoவை பிரித்தானிய பொலீஸ் கைது செய்ய தவறியது. எனினும் International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று Westminster நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அவரை கைது செய்ய பிடியாணையும் வழங்கியிருந்தது. 

ஆனால், இலங்கை அரசு கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில், FCO ஊடாக சட்டத்துக்கு முரணாக இந்த விடயத்தில் தலையீடு செய்யப்பட்டு இந்த பிடியாணை இரத்து செய்யப்பட்டுள்ளது. இது பிரித்தானிய நீதிதுறையின் நடுநிலைமையை கேள்விக்குறியாக்கி உள்ளது.


No comments

Powered by Blogger.