மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


இயக்குநர் விஜய் திருமண அறிவிப்பும், அமலா பாலின் டுவிட்டர் பதிவும்!!

திருமண அறிவிப்பை விஜய் அறிவித்த அதே நேரத்தில் அமலா பாலும் தனது டுவிட்டரில், ''போராடுவேன், உயிர் வாழ்வேன், எந்த தடைகள் வந்தாலும் அவற்றில் இருந்து எழுந்து உயர்ந்து நிற்பேன். என்னுடைய வலிமையே சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியில் நான் வைத்திருக்கும் நம்பிக்கையே'' என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஏ.எல். விஜய். இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் இளைய மகன். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ’கீரிடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக இவர் கால்பதித்தார்.

அதை தொடர்ந்து பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், சைவம் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை பதிவு செய்தார். இவர் இயக்கிய சில படங்கள் தமிழ் சினிமாவில் எவர்கிரீன் படங்களாக அமைந்தன.

தெய்வதிருமகள் படத்தின் போது அமலா பாலுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இருவருமே மறுத்தனர். அதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அப்போது இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. விரைவில் இவர்களுக்கு திருமண அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்பார்த்தது போலவே, தலைவா படம் வெளியான சில மாதங்களில் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர். திருமணத்திற்கு பிறகு அமலா பால் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். அது விஜய் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட பிரச்னையால் இந்த திருமண முறிவு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’படத்தை இந்தி மற்றும் தமிழில் இயக்குவதற்கு ஏ.எல். விஜய் ஆயத்தமாகி வருகிறார். இவருக்கு மறுமணம் செய்துவைக்க அவருடைய பெற்றோர்கள் மணப்பெண் தேடி வந்தனர்.

பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2வது திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் மணமுடிக்கும் உள்ள பெண் ஐஸ்வர்யா. இவர் சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா, பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இயக்குநர் ஏ.எல். விஜய், மருத்துவர். ஐஸ்வர்யா திருமணம் வரும் ஜூலை 11ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.