மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் மஹோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்.


வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்றையதினம் நண்பகல்12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ச்சியாகப் பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் இந்தமாதம்-11 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு திருமஞ்சத் திருவிழாவும்இ 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தேர்த் திருவிழாவும், மறுநாள் செவ்வாய்க்கிழமை முற்பகல்-11 மணியளவில் தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.