மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


சரிவர இயங்காத பிரபல சமூகவலைதளங்கள்: பயனாளர்கள் அவதி!

பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகியவை சரிவர இயங்காததால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டுவரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்கள் சரிவர இயங்காததால் அவற்றின் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர். இந்த சமூக வலைதளங்களில் புகைப்படங்களை தரவிறக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ முடியவில்லை. கடந்த இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த பிரச்சனையால் சமூக வலைதள செயல்பாடுகள் பெரும்பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் ஏதும் தெரியாமலும், வாட்சப்பில் அனுப்பப்பட்டுள்ள புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய முடியாததால் இந்த சமூக வலைதளங்களை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. புகைப்படங்கள் ஏதும் மொபைல் போன்களில் லோட் ஆகாததால் தங்கள் மொபைல் போன்களில் தான் ஏதோ பிரச்சனை போல என்று பயனாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய மூன்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்குவதால் அவற்றின் சர்வரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பொதுவாக சமூகவலைதளங்கள் முடங்கும் போது பிரச்சனை உடனடியாக சரிசெய்யப்படும் நிலையில், இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.