மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


ஆளுநர் தலைமையில் 'வடமாகாண வட்ட மேசை' கலந்துரையாடல்.

இது தொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள  அறிக்கையில்,
வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய "வடமாகாண வட்ட மேசை" கலந்துரையாடலின் ("Northern Province Round Table") முதலாவது கலந்துரையாடல் நாளையதினம்  மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நாளைய இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் அவர்கள் "வடமாகாணத்தின் பொருளாதார எதிர்காலம்" தொடர்பில் உரையாற்றவுள்ளார் எனவும் அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்தம் இடம்பெறும் இந்த "வடமாகாண வட்ட மேசை" கலந்துரையாடலில் ஆர்வமுள்ள எவரும் கலந்து கொள்ளமுடியும் என்பதுடன் இதில் கலந்துரையாட வேண்டிய தலைப்புக்கள் குறித்தும் அதன்போது தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.