மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


பாதுகாப்பு கடவை அமைத்து தருமாறு கோரி மக்கள் போராட்டம்!!

                                                                                                           - இரா.ஜெகன் -
புகையிரத பாதுகாப்பு கடவை அமைத்த தருமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 7 மணியளவில் கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 27ம் திகதி இடம்பெற்ற விபத்தின்போது படையினர் 6பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்த குறித்த பாதையை பாதுகாப்பான கடவையாக மாற்றி தருமாறு மக்கள் இன்றுபோராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித் போராட்டம் காரணமாக யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு புகையிரதம் சுமார் 1 மணிநேரம் தாமதித்தே பயணத்தை தொடர வேண்டி ஏற்பட்டது.

குறித்த புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் தரித்திருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

குறித்த பகுதியில் போராட்டத்தை மேற்கொண்ட மக்களை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றம் புகையிரத திணைக்கள அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

No comments

Powered by Blogger.