மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு உடனடி விளக்கமறியல்!!

                                                                                                                    - விஜித்தா -
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜராகும்படி அழைப்பு விடுத்தும் அவர் உடல் நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை சமூகமளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்காரணமாக கொழும்பு பிரதான நீதவான் லங்காஜயரத்ன தேசிய வைத்தியசாலைக்கு சென்று அங்கு வைத்தே ஹேமசிறி பெர்ணாண்டோவினை நாளை வரையில் வைத்தியசாலை விளக்கமேறியலில் வைக்குமாறு புலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.