மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


புற அழகின் ஆபத்து பற்றி சிறு கதை; நாம் நம்மை நேசித்தாலே போதும் வெற்றி நிட்சயம்!!

ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை..

அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கிறாய் .

கருப்பா இருக்கும் என்னையே எனக்கு பிடிக்கலை என்றது .

கொக்கு சொன்னது, நானும் அப்படித்தான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. .

அது இரண்டு நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது .

காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன், ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது.

உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று .

அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள் .

என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் , என்றது .
மயில் சொன்னது. அன்பு காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது .

இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை ..

எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே , என்றது .

இதுதான் நமது பிரச்சினையும் ...
நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம் நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை .

அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது ஒப்பீடுகளால் யாதொரு பயனும் இல்லை உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள் .

உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது இறைவனின் படைப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றில் உயர்ந்தவைதான்.

பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.....

No comments

Powered by Blogger.