உயிராபத்தை எதிர் நோக்கியுள்ளேன்;புலனாய்வுத்துறையினர் மூலம் அறிந்து கொண்டேன்!!

                                                                                                                 - விஜித்தா -
போதையொழிப்பு நடவடிக்கையினை பாராபட்சமின்றி துரிதகதியில் நான் முன்னெடுத்ததன் விளைவாக எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறையினர் மூலம் நான் அறிந்து கொண்டேன்; என ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலநறுவையில் மகாவலி காணி உறுதி வழங்கும் நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

போதைப் பொருள் வலையமைப்பை இலங்கை நாட்டிலிருந்து முற்றாக களையெடுக்க நான் துணிந்தமையினால் எனது உயிரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது.

இலங்கை புலனாய்வுத்துறையினர் இந்த விடயத்தினை எனக்கு அறிவித்துள்ளார்கள்.

இதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதில்லை நாட்டின் பிரஜையாக எனது தார்மீக கடமைகளில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை என்று அங்கே உரையாற்றும் போது கூறினார்.

No comments

Powered by Blogger.