இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட அறிவித்தல்.

நாளை காலை 6 மணி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி காலை 8 மணி வரையில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

மன்னார் முதல் புத்தளம் வரையில், கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் முதல் மட்டக்களப்பு கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

எனவே மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.