மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


மட்டு- போதனா வைத்தியசாலையில் 10 அம்ச கோரிக்கையினை முன்வைத்து சுகாதார ஊழியர் ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டம்!!

மட்/போதானா வைத்தியசாலையில் சுகாதார ஊழியர் ஒருவர் 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து உணவு தவிர்ப்பு போராட்டம் 

மேலும் தெரிய வருவதாவது வைத்தியசாலை ஒவிசியர் ஒருவரின் அராஜகத்தினை முன் வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றார். 

இவர் ஏற்கனவே தனது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் படி (21.03.2019) அன்று புதிய அவசர சிகிச்சை கட்டிடத்தின் மேல் ஏறி தனது உயிரை பணயம் வைத்து போராட்டம் நடத்திய போது திரு என்.சசிகரன் அவர்கள் தனது கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்று தருவதாக அழைத்துச்சென்றதாகவும் ஆனால் இதுவரையில் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை இதனை தொடர்ந்து இன்று(10/09/2019)  உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது

இவரது போராட்டம் தனி நபர் கருதிய பிரச்சனை அல்ல ஊழியர் அனைவரது பிரச்சனையாக கருதப்படுவதால் வைத்திய சாலை நிர்வாகம் இந்த விடயத்தை கருத்திற்கொண்டு இவரது நியாயமான கோரிக்கைகளுக்கு நீதி கிடைக்க வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுப்பார்களா?

No comments

Powered by Blogger.