மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


தேர்தல் 11ம் திகதி..!!

Image result for elections sri lankaஇடைநிறுத்தப்பட்ட எல்பிட்டி பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் 11ம் திகதி நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிரான மனுவைக் கருத்திற்கொண்டு அங்கு கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்பட்டிருக்கவில்லை.

எனினும் குறித்த மனுவின் அடிப்படையிலான விசாரணைகளில், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் மனுவை ஏற்றுக் கொண்டு விரைவில் தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி அங்கு தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.