சந்திரயான்-2, லேண்டர் தகவல் துண்டிப்பு! இஸ்ரோ அளித்துள்ள முழு விளக்கம்ஜூலை 22-ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதன் செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

வெற்றிக்கான அடிப்படை அளவுகோல்கள் மிஷனின் ஒவ்வொரு கட்டத்திலும் வரையறுக்கப்படும். இதுவரைக்கும் இந்த மிஷன் 90-95% இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-2 செயல்பாடு திட்டங்கள் குறித்தும் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து இஸ்ரோ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘இஸ்ரோவின் முந்தைய திட்டங்களையும் விட சந்திரயான்-2 தொழில்நுட்ப ரீதியில் மிகவும் சிக்கலான மிஷன். நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆய்வு செய்வதற்கு ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவரை சந்திரயான்-2 உடன் எடுத்துச் சென்றுள்ளது.

ஜூலை 22-ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதன் செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இது மிகவும் தனித்துவமான மிஷன், இது நிலவின் ஒரு பகுதியை மட்டும் ஆய்வு செய்யும் நோக்கம் கொண்டதல்ல. ஏற்கெனவே நிலவின் ஆர்பிட்டர் வட்டப்பாதையில் ஆர்பிட்டர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆர்பிட்டரிலுள்ள கேமரா இதுவரையிலான ஆர்பிட்டர் கேமராக்களை விட மிக அதிக ரிசொலிஷன் கொண்ட கேமரா. அதனால், துல்லியத் தன்மை கொண்ட புகைப்படங்களை வழங்கும். அது சர்வதேச அறிவியல் சமூகத்துக்கு உதவும்.

வெற்றிக்கான அடிப்படை அளவுகோல்கள் மிஷனின் ஒவ்வொரு கட்டத்திலும் வரையறுக்கப்படும். இதுவரைக்கும் இந்த மிஷனின் 90-95% இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டநிலையிலும், லூனார் அறிவியலுக்கு பங்களிக்க முயற்சி செய்வோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.