மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் அனுஸ்டிப்பு!!!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாமல் 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் 

யாழ் நல்லூரில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து நல்லூரில்அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில், தியாகி திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 10.45 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பொதுச் சுடரினினை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளின்றி மிகவும் உணர்வு பூர்வமாக மலரஞ்சலி செலுத்தி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.

யாழ். மாநகர முதல்வர், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி,தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மண்ற உறுப்பினர்கள் பங்குபற்றலுடன் ஒற்றுமையாகவும் உணர்வு பூர்வமாகவும் நினைவேந்தல் அனுஸ்ரிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

No comments

Powered by Blogger.