மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு கூட்டமைப்பிற்கு முக்கிய அழைப்பு

Related imageதமிழர் மரபுரிமைப் பேரவை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் மற்றும் கோரிக்கைகள் தமிழர் மரபுரிமை பேரவையால் கூட்டமைப்பினருக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், இந்த சந்திப்பில் தமிழர் மரபுரிமை அமைப்பு சார்பில், அமைப்பின் இணைத்தலைவர்களான அருட்தந்தை ஆம்ஸ்ரோங், க.சுதர்சன், வி.நவனீதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் தமிழர் மரபுரிமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்றைய சந்திப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சட்டரீதியான உதவிகளை கோருவதாக அமையவில்லை.

மாறாக அரச அனுசரணையுடன் மத்திய அரச நிர்வாக கட்டமைப்புக்களினால் வடக்கு கிழக்கு பகுதிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக பின்வரும் அவசர நியாயபூர்வமான கோரிக்கைகளை தங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.

1. நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயமாகும். இவ்வாலயத்தைத் திட்டமிட்டு ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைப்பதை உடன் நிறுத்த காத்திரமான அரசியல் அழுத்தங்களை வழங்க வேண்டும்.

2. வடமாகாணத்தில் வர்த்தமான பிரசுரம் செய்யப்பட்ட தொல்லியல் பிரதேசங்கள், நம்பகத்தன்மையான தமிழ்த் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைகழகம், குறித்த பிரதேசங்களின் உள்ளூர் நிர்வாக மற்றும் கிராம மட்ட மக்களின் பங்ஙகளிப்புக்கள் உடன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்படும் வரை, வர்த்தமான அறிவித்தலில் குறிப்பிட்ட இடங்களில் தற்போதுள்ள இடங்களைவிட மாற்றங்கள் திரிபு படுத்தல்கள் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படாது பேணப்பட வேண்டும் என்பதை வலியுறத்தி அரசாணை ஒன்றினை உடன் வெளியிட குறித்த அமைச்சிடம் இருந்து எழுத்துமூலமான வாக்குறுதி பெறப்பட வேண்டும்.

3. வடமாகாணத்தில் மகாவலி “L “ அபிவிருத்தி வலயம் மூலம் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களமயமாக்கல் தற்போதும் தொடர்ந்து இடம்பெறுவதால் குறைந்தபட்சம் 2007ஆம் ஆண்டு வர்த்தமான அறிவித்தல் மீளப்பெறப்படுவதுடன் 1988ம் ஆண்டு வர்த்தமான அறிவித்தல் எல்லைக்கிராம தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் வரும் நாட்களில் மகாவலி அதிகார சபையினூடாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டு மாகாண திணைக்களங்களூடாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

4. GPS தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 2009ன் பின்னர் வர்த்தமான பிரசுரம் செய்யப்பட்ட ஒதுக்கக் காடுகள் தொடர்பான எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

5. வனஜீவராசிகள் திணைக்களத்தால் 2009 ம் வர்த்தமான பிரசுரம் செய்யப்பட்ட தேசிய பூங்கா மற்றும் இயற்கை இடங்கள் மக்களின் குடியிருப்பு வாழ்வாதாரம் என்பவற்றுடன் தொடர்புடையது ஆகையால் இவற்றுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

அத்துடன் மக்கள் குடியிருப்புக்கள் கலாச்சாரம் வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்படா வண்ணம் அரசாணை ஒன்று உடன் வெளியிடப்பட வேண்டும் மேற்குறிப்பிட்ட நியாயபூர்வ கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் செவிசாய்க்க தவறும் பட்சத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு வழங்கும் ஆதரவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.