பயங்கரவாதியின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில்...

-மட்டு விஷேட செய்தியாளர்

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் உடல் பாகங்கள் இன்று (2.09.2019) திங்கட்கிழமை பிற்பகள் தோண்டி எடுக்கப்பட்டது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று தற்கொலை குண்டு தாக்குதல் நடாத்திய பயங்கரவாதி நசார் முகம்மட் ஆசாத் என்பவரின் உடல் பாகங்கள் கடந்த 26.08.2019 அன்று மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசாரினால் புதைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக இதை தோண்டி அகற்றுமாறும் வலியுறுத்தி பாராளுடன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மட்டக்களப்பில் இடம் பெற்றதுடன் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து பொலிசாரினால் இந்த விவகாரம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டதையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் புதைக்கப்பட்ட இந்த தற்கொலை குண்டுதாரியின் உடல் பாகங்களை தோண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று பிரேத அறையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதயைடுத்து குறித்த தற்கொலை குண்டு தாரியின் உடல் பாகங்கள் இன்று (2.09.2019) திங்கட்கிழமை பிற்பகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.

இதன்போது அங்கு பாராளுமன்ற உறுப்பினர். எஸ். வியாழேந்திரன் மாநகரசபை மேஜர்.ரி.சரவணபவன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையில் மயானத்துக்கு அருகில் குழுமியிருந்தனர்

குறித்த தற்கொலை குண்டுதாரியின் உடல் பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த உடல் பாகங்கள் தோண்டப்பட்டது.


No comments

Powered by Blogger.