மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


வடக்கு- வேலையற்ற பட்டதாரிகள் மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வட மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 


மாகாண ஆளுநரின் பொது மக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற நிலையிலேயே வேலையில்லலா பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குறித்த அலுவலகம் முன்பாக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தமக்கான நியமனத்தை கால தாமதமுன்றி விரைந்து வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் பட்டதாரிகளில் உள்வாரி வெளிவாரி எனப் பாகுபாடு காட்ட வேண்டாம், அனைவருக்கும் நியமனம் வேண்டும். கால தாமதம் வேண்டாம், படித்தவர்களுக்கு வேலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.