இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தின் இரத்ததான முகாம்.

இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் 4மாதங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இரத்ததான முகாம் வரிசையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08-09-2019) 14வது இரத்ததான முகாமும், இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்திற்கான காணி கொள்வனவுக்கு நிதி நன்கொடை வழங்கியவரும், இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பற்சிகிச்சை கூடத்துக்கான நிதி நன்கொடை வழங்குனருமான அமரர் சற்குசீலன் அவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 3.00 மணிவரை இடம்பெறவுள்ள இந்த இரத்ததான முகாமிற்கு தெல்லிப்பழை இரத்தவங்கியினர் கலந்துகொண்டு குருதிவகைகளை சேகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.