மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


கல்வி அமைச்சரிடம் அப்துல்லாமஹ்ரூக் கோரிக்கை!!

வெளி மாவட்டங்களுக்குள் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரிய நியமனங்களை அவர்களுடைய சொந்த பிரதேசங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிமாவட்டங்களில் நியமனக் கடிதங்களை பெற்ற ஆசிரிய, ஆசிரியைகளினால் பிரதியமைச்சரிடத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை செய்து தருமாறு கோரியிருந்தனர்.

இந்நிலையில் இன்று இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமிடம் பிரதியமைச்சரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசேட புள்ளிகள் மூலம் சித்தியடைந்த அநேகமானவர்கள் வெளி மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நியமனத்தின் முன்னரே மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட கல்வி உயரதிகாரிகளுடன் இது தொடர்பான கலந்துரையாடலில் தங்களது சொந்த மாவட்டங்களிலேயே நியமனம் செய்வது தொடர்பில் முடிவுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் மாற்றமாக இவ்வாறான நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அநேக பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை வெற்றிடங்கள் நிலவி வருகிறது.

இதனை கருத்திற் கொண்டு வழங்கப்பட்ட நியமனங்களை தங்களது சொந்த மாவட்டத்தில் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.