யாழ் பொன்னாலை மேற்கில் மின் சாதனங்கள் சேதம்; நடந்தது என்ன?

வலி மேற்கு பொன்னாலை மேற்கில் உயர் அழுத்த மின்சாரம் காரணமாக 15 வரையான வீடுகளில் மின் சாதனங்கள் சேதமடைந்துள்ளன.

நேற்று மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. தொலைக்காட்சிப் பெட்டிகள், பிளேயர்கள் உள்ளிட்ட பல மின் சாதனங்கள் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பாக மின்சார சபையின் உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது சேதமடைந்த பொருட்களுக்கு மின்சார சபை இழப்பீடு வழங்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Powered by Blogger.