மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


நிபந்தனை அடிப்படையிலான அரசியலுக்குத் தயார் இல்லையாம்- சஜித் அதிரடி!!!

மத்துகமவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு  உரையாற்றிய  அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்கள்,

நிபந்தனைகளுடன் எனக்கு வேட்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று இன்று நாடு முழுவரும் பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது.

நான் நாட்டு மக்களின் நலன் கருதியே எனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன். அதனால் நான் யாருக்கும் கைப் பொம்மை இல்லை. தலையாட்டியும் இல்லை. எனக் கென ஒரு சரீரப் பண்புகள் உள்ளன.

எனது சுயகௌரவம் ஜனாதிபதிப் பதவியை விடவும் மேலானது. அந்தக் கைப்பொம்மை விளையாட்டுக் காலம் போய் விட்டது. நாடே முக்கியம் என்பதை யோசித்துச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.