மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


கோட்டபாய- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் திடீர் சந்திப்பு.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேற்றிரவு நடாத்திய பேச்சுவார்த்தையும் உடன்பாடுகள் இன்றி நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சின்னம் தொடர்பான விடயத்தில் உடன்பாடு எட்டப்பட வில்லையெனவும், ஏனைய விடயங்களில் சில உடன்பாடுகள் காணப்பட்டதாகவும் தயாசிறி எம்.பி. கூறியுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.