மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


வவுனியாவில் குளத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

                                                                                                                 - வவுனியா நிருபர் -
வவுனியா, பேயாடிகூழாங்குளம் குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.

வவுனியா, பேயாடி கூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் மடுகந்தை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பேயாடிகூழாங்குளம் குளப்பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தவர்கள் குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு சென்ற மடுகந்தை பொலிசாரும், இராணுவத்தினருடம் குளத்தில் இருந்த சடலத்தினை மீட்டனர்.

குறித்த சடலமானது கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட எஸ்.விஜயலக்சுமி (வயது 56) என்பவருடையது என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து மடுகந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.No comments

Powered by Blogger.