100,000 பேருக்கு வேலைவாய்ப்பு 20 ம் திகதிக்கு முன்; அரசின் அதிரடி அறிவிப்பு!!

வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்படவுள்ள 100,000 வேலை வாய்ப்புகள் தொடர்பான, பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, அதற்கான ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் விண்ணப்பங்கள் ஜனவரி 20 க்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் நோக்கம், மிகவும் வறிய நிலையில் உள்ள, சமுர்த்தி உதவி பெற தகுதியிருந்தும் சமுர்த்தி திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத குடும்பங்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய குடும்பங்களில், தொழிலாளர் சக்தியில் பங்களிக்கக்கூடியவர்களை அடையாளம் கண்ட பின்னர், சம்பந்தப்பட்ட துறைகளில் அவர்களுக்கு ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு அவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இதற்காக கல்வியறிவற்ற அல்லது குறைந்த கல்வியறிவற்றவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், அதன் முதல் கட்டமாக நாடு முழுவதும் 100,000 புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களை நிர்வகிக்க, பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வி கற்றவர்களிற்காக வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒவ்வொரு பிரதேச செயலகப் பகுதியிலும் சுமார் 300-350 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். பிரதேசத்திலுள்ள விஹாரதிபதி, பிற மத தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், கிராம சேவகர்களின் மேற்பார்வையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

தேர்வின் சரியான தன்மையை மேலும் உறுதிப்படுத்த பாதுகாப்பு படையினரில் திறமையான பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தகுதியான பயனாளிகள் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் கல்வியறிவு தேவைப்படாத வேலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

தச்சு, விவசாயம், மீன்வளம், வனவியல் மற்றும் பிற பகுதிகளுக்கு பயிற்சி அளிக்கவும் சேவை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுதப்படைகளின் மேற்பார்வையில் இது தொடர்பான வேளைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.