விளையாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை 10 மாதங்கள் சிறையில் அடைப்பு!!

பொலநறுவையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Image result for sri lanka police
ஹிங்குரங்கொட பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.

எனினும் அவர் விளையாட்டு துப்பாக்கி ஒன்றையே வைத்திருந்தார் என தெரியவந்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அது விளையாட்டு துப்பாக்கி என நிரூபிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்க ஆய்வாளர் 10 மாதங்கள் எடுத்துள்ளனர்.

ஹிங்குரங்கொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பிரசாத் குமார என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் தனது வேலையை இழந்ததாகவும், பாதாள உலகக்குழுவை சேர்ந்த குற்றவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து அவரது சகோதரரும் வேலையை இழந்துவிட்டார் என்றும் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி பொலிஸார் எனது வீட்டிற்குள் நுழைந்து என்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டச் சொன்னார்கள். என்னிடம் கைத்துப்பாக்கி இல்லை என்று கூறினேன். ஆனால் அவர்கள் முழு வீட்டையும் தேடி ஒரு பொம்மை துப்பாக்கியை காவலில் எடுத்து என்னைக் கைது செய்தனர். இது பொழுதுபோக்காக பழைய பொருட்களை சேகரித்த சகோதரர் கொடுத்த பொம்மை கைத்துப்பாக்கி என்று நான் பொலிஸாரிடம் தெரிவித்தேன் என பிரசாத் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னை நம்பாமல் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 10 மாதங்கள் சிறையில் அடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.