வாகரையின் ஆலங்குளம், இறாலோடை ஆகிய கிராமங்களிலுள்ள 177 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது!!

வாகரையின் ஆலங்குளம், இறாலோடை ஆகிய கிராமங்களிலுள்ள 177 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் சுவிஸ்லாந்து பப்பிகோண் தமிழ்ச் சொந்தங்களின் நிதியுதவியுடன் ஆசிரியர் பரமேஸ் அவர்களின் ஏற்பாட்டில் கடந்த 5ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது. இந்த 177 மாணவர்களும் மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் தமது கல்வியை தொடர்வதில் பல சிக்கல்களை எதிர்கொள்வதால் அத்தனை மாணவர்களதும் கல்விக்கு தேவையான முழுமையான பொறுப்பினையும் பப்பிகோண் தமிழ்ச்சங்க சொந்தங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இது தமக்கான மிகப்பெரிய உதவியெனவும் கைகொடுத்துள்ள பப்பிகோண் தமிழ் சொந்தங்களுக்கும் ஒழுங்குபடுத்திய ஆசிரியருக்கும் கிராம மக்கள் தமது நன்றியை தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.