சோலெய்மனியின் இறுதி ஊர்வல சனநெரிசலில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு!!


அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ உயர் தளபதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் நெரிசலில் சிக்கி 50 பேர் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் 48 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசிம் சோலெய்மனியின் உடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை அடக்கம் செய்யப்படவிருந்தது. இந்த உயிரிழப்புக்கள் காரணமாக உடல் அடக்கம் பிற்போடப்பட்டுள்ளது. புதிய நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சோலெய்மனியின் சொந்த ஊரான கேர்மனில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் வீதிகளில் நிரம்பியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானிய ராணுவத் தளபதியின் கொலை அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.

ஈரானின் அதியுயர் தலைவர் அயதொல்லாஹ் அலி கமேனிக்கு அடுத்த நிலையில் இரண்டாவது சக்திவாய்ந்த மனிதராக காசிம் சோலெய்மனி கருதப்பட்டார்.

எனினும் அமெரிக்கா அவரை ஒரு பயங்கரவாதியாகவும் அமெரிக்கத் துருப்புக்களுக்கு அச்சுறுத்தலாகவும் கருதியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.