அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தை அண்டிய 7 கிராமங்களுக்கான குடிநீர் பிரச்சனையினை தீர்த்தார் கருணா!!

மிக நீண்ட காலமாக குடிநீரின்றி தவித்துக் கொண்டிருந்த அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தினை அண்டிய ஏழு (07) கிராமங்களுக்குமான குடிநீர் பிரச்சினையை தீர்த்துவைக்க தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) அவர்கள் இன்று 08.01.2020 புதன்கிழமை நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து அம்பாறை மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்துவைக்க அதற்கான பாதீட்டு அனுமதியை அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக அப்பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட விநாயகமூர்த்தி முரளிதரன்அவர்கள் குறித்த அமைச்சரை தொலைபேசி வாயிலாக நேரடியாகத் தொடர்புகொண்டு அங்குள்ள நிலைமைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு அப் பிரதேசத்தின் குடிநீர் பிரச்சனைக்குத் தடையாகவிருந்த பாலத்தின் நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகளின் அறிக்கைகளைப் பரிசீலித்து இன்று அம் மக்களின் தாகம் தீர்க்கும் செயற்பாட்டை வெற்றிகரமாக செய்திருப்பதாகவும் மேலும் இதற்காக குறித்த அமைச்சிடமிருந்து 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


No comments

Powered by Blogger.