ளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்!!கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றள்ளது.

கிளிநொச்சி திருநகர் தெற்கு பகுதியில் தனது வீட்டு பண்ணையை சுத்திகரித்து கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் மாட்டு பண்ணை ஒன்றை வீட்டுடன் மேற்கொண்டு வருகின்றார்.

குறித்த பண்ணையை காலை நீரினால் சுத்திகரித்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதன்போது மின்தாக்கத்திற்கு உள்ளான குறித்த நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவான குறித்த இளைஞன் பெரும் முதலீட்டாளராக வரவேண்டும் என எண்ணம் கொண்டு பல்கலைக்கழக கல்வியை நிறுத்தி சுயதொழில் முயற்சியாளராக மாறியிருந்தார்.

கடும் முயற்சியினால் பண்ணையாளராக முன்னேறிவந்த குறித்த இளைஞனின் மறைவு பிரதேசத்தை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

உயிரிழந்த குறித்த இளைஞன் 28 வயதுடைய மங்களதேவன் விஜயகுமார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

No comments

Powered by Blogger.