கிழக்கு பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!!!


கடந்த (09) திகதி காணாமல் போன கிழக்கு பல்கலைகழக முதலாம் ஆண்டு மாணவன் மட்டு வவுணதீவு கரையாக்கன்தீவு களப்பு பகுதியில் சடலமாக நேற்று (14) செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

பதுளை லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சீனிதம்பி மோகன்ராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தில் சுதேச பாராமரிப்பு மற்றும் விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்விகற்று வந்த மாணவன் கடந்த வியாழக்கிழமை (09) பல்கலைக்கழகத்தின் விடுதியில் இருந்து காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவனின் பெற்றோர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிசார் மற்றும் கடற்படையின் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை பகல் மட்டு வவுணதீவு கரையாக்கன்தீவு களப்பு பகுதியில் சடலமாக மீட்டுள்ளார் .

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மற்றும் வவுணதீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments

Powered by Blogger.