காவலூர் மைந்தர்கள் அமைப்பின் பொங்கல் விழா.

காவலூர் மைந்தர்கள் அமைப்பினால் நேற்றையதினம் ஊர்காவற்றுறை திறந்த வெளி அரங்கில் பொங்கல் விழா நடைபெற்றது.

‘பாராம்பரிய விளையாட்டுக்களை இளம் தலைமுறைக்கு சொல்லி கொடுப்போம்’ என்ற நோக்கில் நடைபெற்ற நிகழ்வில் கிளிக்கோடு, தலையனை சண்டை, முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல் மற்றும் சிறுவர்களுக்கான போட்டிகள் என்பன நடைபெற்றன.

கிளிக்கோடு போட்டிகளில் கரம்பொன், தம்பாட்டி மற்றும் ஊர்காவற்றுறை அணிகள் மிகவும் ஆர்வமாக பங்குபற்றி இருந்தார்கள். பலத்த போட்டியின் மத்தியல் ஊர்காவற்றுறை அணி வெற்றியீட்டியது.

15 மேற்ப்பட்ட இளைஞர்கள் பங்குபற்றிய விறுப்பான தலையனை சண்டையில், திரு. க. மெறோயன் வெற்றி பெற்றார். இதனை தெடர்ந்து முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல் மற்றும் சிறுவர்களுக்கான நிகழ்வுகள் நடைபெற்றது.

இறுதியில் பரிசளிப்பு நிகழ்வு திரு. அல்போன்ஸ் தயாட்றூஸ் தலமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஊர்காவற்றுறை பிரதேசத்தின் தவிசாளர் திரு. ம. ஜெயகாந்தன், சிறப்பு விருந்தினராக காவலூர் மைந்தர்கள் அமைப்பின் ஆலோசகர் இ. ஜெயால்ட் அன்ரனி மற்றும் கெளரவ விருந்தினராக கிராம சேவையாளர் திரு. மரிஸ்டீன் பாலா டினேஸ் ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.