கலார்ப்பணா நாட்டிய மாணவி அகில இலங்கை வயலின்போட்டியில் முதலிடம்!!

கல்வி அமைச்சினால் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதம் / முஸ்லிம் போட்டி 2019 கண்டி சுவர்ணமாலி பாலிகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் இடம்பெற்றது இதில் கனிஸ்ட பிரிவு போட்டியில் மட்டக்களப்பு கல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலைய மாணவி செல்வி ஜெயராம் மதுசஜனா முதலாமிடத்தினை பெற்றுள்ளார் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப்பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்விகற்று வரும் இவர் அகிலஇலங்கை பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று மாவட்டத்திற்கும் தான்கற்கும் பாடசாலைக்கும் நாட்டிய நிலையத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவரது போட்டிநிலையின் போது இவருக்கான பக்கவாத்திய இசையினை ஜெயராம் யுதிஸ்ரன் வழங்கியிருந்தார்.

No comments

Powered by Blogger.