பாண்டிருப்பு சமுத்திரத்தில் திருவெம்பாவை தீர்த்தோற்சவம்!!

                                                                                                 - செ.துஜியந்தன் -
சேனைக்குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் திருவெம்பாவை திருவாதிரை தீர்த்தோற்சவம் நேற்று பாண்டிருப்பு சமுத்திரத்தில் நடைபெற்றது. ஆலயபிரதம குரு வர்மா குருக்கள் தலைமையில் நடைபெற்ற வழிபாடுகளில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

சேனைக்குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கடந்த முதலாம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக பத்து தினங்கள் திருவெம்பாவை விசேட பூசைவழிபாடுகள் நடைபெற்றுவந்தன.

மார்கழிமாத திருவாதிரையை இறுதிநாளாக கொண்டு பத்துதினங்கள் சைவர்களால் திருவெம்பாவை விரதம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. திருவெம்பாவை விரத காலத்தில் அதிகாலையில் நீரடி சைவர்கள் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சிபாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் கோவிலுக்குச்செல்வார்கள். இவ் விரதத்தை கன்னிப்பெண்களே அதிகமாக கடைப்பிடிக்கின்றனர்.

நேற்றையதினம் திருவெம்பாவை தீர்த்தோற்சவம் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெற்றன.No comments

Powered by Blogger.