அதிகாரிகளுக்கு முக்கிய பணிப்புரை!!

தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுர்க்ககத்தில் இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் அரச திணைக்களங்கள் மற்றும் கொழும்பு மாநகரசபையின் ஒத்துழைப்புடன் பொலிஸ் மற்றும் ராணுவத்தின் பூரண பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாதுகாப்பான தேசம் – வளமான நாடு’ என்ற தெனிப்பொருளில் கீழ் இம்முறை 72 ஆவது சுதந்திர தின நிகழ்வை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.