யாழ் இளைஞன் துருக்கியில் உயிரிழப்பு!!யாழ்ப்பாணம் – கரவெட்டி – வதிரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துருக்கியில் உயிரிழந்துள்ளார்.

மயில்வாகனம் சிவரஞ்சன் என்ற 37 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகவரூடாக பிரான்ஸிற்கு செல்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றதாக உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இளைஞர் முகவர் ஊடாக பிரான்ஸிற்கு புலம்பெயர முயற்சித்த வேளை துருக்கியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் துருக்கியிலிருந்து சடலத்தினை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.