மறைந்த பி.எச்.பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி.
உடல்நலக்குறைவால் காலமாகிய தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் பூதவுடல் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பி.எச்.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

‘மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறந்த முறையில் பணியாற்றியவர். சட்டப்பேரவை தலைவராக இருந்து தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். அவரது இழப்பு அதிமுகவுக்கு பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.