பாராளுமன்ற தேர்தலில் களமிறங்க தயாராகும் அனுஷா சந்திரசேகரன்.


மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சரும் எனது தந்தையுமாகிய அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களின் 10வது சிரார்த்த தின நிகழ்வுகள் கடந்த முதலாம் திகதி தலவாக்கலையில் அனுஷா சந்திரசேகரனின் காரியாலயத்தில் நடைபெற்றது.

அனுஷா சந்திரசேகரனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் பலரும் மலையக மக்கள் முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்கள் பலரும், அதிபர் ஆசிரியர்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்

இதன்போது 2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், கட்சி கதவடைப்பு செய்யுமானால் மாற்று தேர்வை நாடுமாறும் அவர்கள் குறிப்பிட்டனர்

''எனது தந்தையின் வழியில் கொள்கை மாறாது, மக்களுக்கான அரசியலை நான் முன்னெடுப்பேன். மக்களின் ஆசியும், அன்பும்தான் எனக்கு தேவை. தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்." என அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.