காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலியாவுக்கு கோட்டா வழங்கிய இலவச உதவி!!

காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலியாவுக்கு இலங்கை தேயிலையை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசனுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொலைபேசி மூலம் கலந்துரையாடியபோதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த உரையாடலின் போது, தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.

2004 சுனாமி மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட இலங்கை, இந்த நேரத்தில் அவுஸ்ரேலியா மக்கள் மீது பரிவுணர்வுடன் இருப்பதாக ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ ஏற்கனவே மீட்புப் பணியாளர்கள் உட்பட 30 க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் கொன்றுள்ளது, அதே நேரத்தில் நாட்டின் தாவர மற்றும் விலங்கினங்களுக்கும் பாரிய அளவில் அழிவடைந்துள்ளன.

பல மாதங்களாக கட்டுக்கடங்காமல் அதிகரித்துவரும் தீப்பிழம்புகளால் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

No comments

Powered by Blogger.