ஈராக் மோசமான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் : ட்ரம்ப் எச்சரிக்கை!

Image result for trump warningஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற நினைத்தால் மிக மோசமான பொருளாதாரத் தடைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என அமெரிக்கா ஈராக்கை எச்சரித்துள்ளது.

பாக்தாத் விமானம் நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் படை தளபதி சுலைமானி கொல்லப்பட்டதைத் அடுத்து வெளிநாட்டு படைகளை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அரசு அழைப்புவிடுத்த தீர்மானத்திற்கு ஈராக் பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

குறித்த இத் தீர்மானத்தை தொடர்ந்தே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்ம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

பல பில்லியன் டொலர்கள் மதிப்பிலான விலை உயர்ந்த விமான தளங்களை கட்ட அமெரிக்கா அளித்த பணத்தை ஈராக் திரும்ப அளிக்கும்வரை அமெரிக்க படைகள் அந்நாட்டிலிருந்து வெளியேறாது.

எங்கள் படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால் அவர்கள் இதற்கு முன்னர் பார்த்திராத வகையில் பொருளாதார தடைகளை விதிப்போம் என தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்கா , ஈரான் இரு நாடுகளுக்கிடையே பதட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.