மட்டு- போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் பணியேற்பு!!

                                                                                                                                                                                 Media Unit, - Batticaloa
                                                                                                                                                                          ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கணேசலிங்கம் கலாரஞ்சினியின் அயராத பணியினால் தற்போது முல்லைத்தீவு சட்ட வைத்திய நிபுணர் ஏ.இளங்கோவன் கடந்த திங்கட் கிழமை(6) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியினை பொறுப்பேற்றுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் இல்லாத நிலையில் பிரேத வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பில் இருந்து பொலனறுவை அம்பாறை ஆகிய வைத்தியசாலையிலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது.

தற்காலிகமாக இணைப்பு செய்யப்பட்டுள்ள சட்ட வைத்திய நிபுணர் ஏ.இளங்கோவன் பணியினை பொறுப்பேற்ற அன்றையதினமே பிரேத பரிசோதனைகளுக்காக சில நாட்களாக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து பிரேத பரிசோதனைகள் ஒரே நாளில் முடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் ஏற்படுகின்ற மரணங்களை சட்ட பிரேத பரிசோதனை நடத்துவதாயின் ஏழை மக்கள் அதிகளவான பணத்தினை செலவு செய்வதுடன் காலத்தினையும் விரையம் செய்த நிலையில் பணிப்பாளர் கணேசலிங்கம் கலாரஞ்சனியின் முயற்சியினால் மட்டக்களப்பு மக்களுக்கு ஓர் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான நடவடிக்கையினை நிரந்தரமானதாக மாற்றியமைப்பதற்கான தொடர் நடவடிக்கையினை பணிப்பாளர் எடுத்து நிரந்தரமான சட்ட வைத்திய நிபுணரை விரைவில் பெற்றுத்தர வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையிலும் சில முக்கிய பிரிவுகளுக்கான வைத்திய நிபுணர்களுகளின் தட்டுப்பாடு காணப்படுகின்றமையும் அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் சட்ட வைத்திய நிபுணர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிரந்தரமாக நியமிப்பதற்கு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்களும் முயற்சி எடுக்கப்படல் வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.