சிறுமி ஒருவரின் கைகளை கட்டி மூர்க்கத்தனமான தாக்குதல்;தந்தை உட்பட மூவர் கைது!!

கொட்டவெஹற பகுதியில் சிறுமி ஒருவரின் கைகளை கட்டி மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்திய இரு பெ ண்களையும், சிறுமியின் தந்தையையும் பொலிஸாா் கைது செய்துள்ளனா்.தாக்குதலுக்குள்ளான சிறுமியை பாதுகாப்பாக மீட்ட பொலிஸாா், நிக்கவரெட்டிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.சிறுமியின் சிறிய தாயும் அவரின் உறவினர் பெண் ஒருவருமே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள மூவரும் இன்றைய தினம் நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.