ஈரானுடனான மோதலின் உச்சம்; இலங்கையில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை!இலங்கையில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து மத்திய கிழக்கின் ஈராக் போன்ற நாடுகளிற்கு பயணிக்கும் வெளிநாடு பிரஜைகள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் இதன்போது கோரப்பட்டுள்ளது.

அத்துடன் தமது பயண ஆவணங்களை எந்நேரமும் தம் வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிற்கான தமது தேவையற்ற பயணங்களை அமெரிக்க பிரஜைகள் தவிர்க்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும், ஈரானிற்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.