சம்பந்தன் மாவை சேனாதிராசா பாராளுமன்ற தேர்தல் களத்தில் களமிறங்குவார்களா? சீ.வீ.கே.சிவஞானம் பதில்!!!


இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் கட்டாயம் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என வடமாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் அடுத்த தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும். அவர்கள் போட்டியிடா விட்டால் தமிழ் அரசு கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் மாவை போட்டியிடா விட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். அவர் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிட வேண்டும்.

இரா.சம்பந்தன் திருகோணமலையில் நிச்சயம் போட்டியிட வேண்டும். அவர் முழுமையாக செயற்பட முடியாத நிலைமை உருவாகினால், அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவராக செயற்பட, மாவை சேனாதிராசா தலைவராக செயற்பட வேண்டும்.

தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற செய்தி வெளியானபோது, மாவை சேனாதிராசாவை நான் நேரில் கேட்டேன். தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை தானே முடிவெடுப்பேன். ஏனையவர்கள் அந்த முடிவை எடுக்க முடியாது என அவர் தெளிவாக கூறியிருந்தார் எனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.