ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த விசாரணைகள் இன்று ஆரம்பமாகும்;அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம்!!



நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த விசாரணைகள் இன்று ஆரம்பமாகும் என அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறுவெட்டுக்கள், கணினிகள் மற்றும் உரையாடல்களைக் கொண்ட பிற மின்னணு உபகரணங்கள் தற்போது திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் நுகேகொட நீதவான் நீதிமன்றம் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு குறித்த மின்னணு உபகரணங்களை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

அத்தோடு ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத கைத்துப்பாக்கியும் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

எனேவ இந்த விடயம் தொடர்பாக இன்று முதல் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு உரையாடல்களைப் பற்றிய முடிவுகளை நீதிமன்றத்தில் முன்வைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.