யாழ் NHDA வீடமைப்புத் திட்டம் தொடர்பாக கொழும்பில் அமைச்சின் உயர்மட்ட கலந்துரையாடல்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வீடமைப்புத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் பி.ப 4 .30 மணிக்கு கொழும்பில் உள்ள செத்சிறிபாயவில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் 2018, 2019 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் தொடர்பாகவும் பயனாளிகளிற்கு இதுவரை வழங்கப்படாதிருக்கும் கொடுப்பனவு தொடர்பாகவும் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் வீடமைப்புத் திட்டம் தொடர்பாகவும் அமைச்சின் கௌரவ இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் அவர்கள் ஒழுங்குசெய்தார்.

மேற்படி கலந்துரையாடலில் அங்கஜன் இராமநாதன் அவர்கள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தேசிய வீடமைப்புத் திட்டம் தொடர்பாகவும் அதனால் பயனாளிகள் எதிர்கொண்ட கடன் பிரச்சனைகள் மற்றும் மக்களில் இடர் நிலைமை தீர்க்க படவேண்டும் என்றும் அமைச்சருக்கு வலியுறுத்தினார்.

இந்த விடயம் தொடர்பாக ஐனாதிபதி மற்றம் பிரதமரிடம் கொண்டு செல்லப்பட்டதென்றும் வருகின்ற வரவு செலவு திட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
மற்றும் கடந்த அரசாங்கத்தால் 4086 வீட்டுத்திட்டங்கள் எந்தவொரு ஒதுக்கீடுகளும் இல்லாமல் தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். 

அரசாங்கத்திடம் பணம் இல்லாத போதும் இவ்வாறான செயற்திட்டம் மக்களை ஏமாற்றும் வகையிலான ஒரு செயற்திட்டம் என்பதையும் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலைமையிலும் இம் மக்களுக்கு இவ் வீட்டுத்திட்டங்களை முழுமையாக கட்டி முடிப்பதற்கு புதிய அரசாங்கம் அர்பணிபுடன் செயற்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இக் கலந்துரையாடலின் முடிவில் அடுத்த வாரமளவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் விசேட குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பௌதீக முன்னேற்றத்ததையும் நிதி வழங்கல்களையும் ஆராய்ந்து அமைச்சுக்கு அறிக்கை ஒன்றை சமர்பிப்பார்கள்.

அதை தொடர்ந்து வீடமைப்பு அமைச்சின் கௌரவ இராஜாங்க அமைச்சருடன் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் யாழிற்கு விசேட விஜயம் மேற்கொண்டு இந்த விடயம் தொடர்பாக மக்களிற்கு சாதகமான ஒரு முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி எடுப்பார்கள் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது.No comments

Powered by Blogger.