இலங்கைக்கு ரூ.1.1 பில்லியன் உதவி

ஐக்கிய அமெரிக்க மில்லேனியம் சலன்ஞ் கோப்பரேஷன் (Millennium Challenge Corporation) அபிவிருத்தி உடன்படிக்கைகளின் முன்னோடி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு, 1.1 பில்லியன் இலங்கை ரூபாயை நன்கொடையாக வழங்க உள்ளது. 
ஐரோப்பா, ஆசியா, பசுபிக் மற்றும் இலத்தீன், அமெரிக்காவின் பிராந்தியத் துணைத் தலைவர் ஃபெதிமா ணு. சுமரின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தின் Millennium Challenge Corporation இன் (MCC) பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு வருகைதந்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இலங்கையர்களுக்கான பொருளாதார வாய்ப்பை ஊக்குவித்தல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய நோக்கங்களுக்காக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தி உடன்படிக்கைகளின் முன்னோடி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான ஐந்தாண்டு மானியத் திட்டத்தை முன்னெடுக்கவே இந்த நிதி உதவியளிக்கப்பட்டுள்ளது. 

“ஒரு முதலீட்டுத் திட்டத்தை ஆதரிக்க, சாத்தியமான முதலீட்டுக்கான குறிப்பிட்ட திட்டங்களை அடையாளம் காணும் மற்றும் பகுப்பாய்வு செய்வது உட்பட அபிவிருத்தி உடன்படிக்கைகளுக்கு, தற்போது மிலேனியம் சவால் கூட்டுத்தாபனம் ஆதரவளிப்பதை வழங்கிக் கொணடிருக்கிறது என்றும் அந்த நிதியுதவியில் 1.1 பில்லியன் இலங்கை ரூபாயை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” எனவும் சுமர் தெரிவித்துள்ளார். 

“ஏனெனில், இந்த உடன்படிக்கைகள் இன்னமும் அபிவிருத்தியில் உள்ளன, உடன்படிக்கைகளுக்கான மொத்த நிதித் தொகை இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. நிதியுதவியில் 7.4 மில்லியன் ரூபாயானது, MCC உடன்படிக்கையின் நிதித்தொகைக்கு மேலதிகமாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பொருளாதார வளர்ச்சிக்கான கட்டுப்பாட்டுப் பகுப்பாய்வின் அடிப்படையில், MCC மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன, போக்குவரத்து மற்றும் நிலப்பகுதிகளில் உள்ள சாத்தியமான திட்டங்களில் தற்போது கவனத்தைச் செலுத்துகின்றன. 

இலங்கை அரசாங்கம், MCC உடன்படிக்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு, பிரதமர் அலுவலகத்துக்குள், இலங்கை அபிவிருத்தி உடன்படிக்கைக் குழு என்னும் ஒரு செயற்றிட்ட முகாமைத்துவ அலகு ஒன்றை நிறுவியுள்ளது. பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் வறுமையைக் குறைக்கும் வகையில் உயர்ந்த தரம், ஆதார அடிப்படையிலான மற்றும் நிலையான உடன்படிக்கைகளை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடுமையான மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மூலம் MCC பங்குதார நாடுகள் பொறுப்புடைமை வாய்ந்தவையாக விளங்குகின்றன. 

இலங்கை அபிவிருத்தி உடன்படிக்கைக் குழுவானது, சாத்தியமான பயனாளிகள், சிவில் சமுதாயம், தனியார் துறை, பிற நன்கொடையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் உட்பட உள்ளீடுகளைச் சேகரிப்பதற்கு ஒரு பரந்த பங்குதாரர் குழுவினருடன் ஆலோசனை வழங்குகினற்னர். 

2016 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், MCC இன் பணிப்பாளர் சபையானது அபிவிருத்தி உடன்படிக்கைகளை மேம்படுத்துவதற்கு இலங்கையைத் தெரிவு செய்துள்ளது. இலங்கை MCC இன் ஒப்பந்த உடன்பாட்டுப் பெறுபேற்று அட்டையில் 20 குறிகாட்டிகளுக்கு 13 இனைப் பெற்று சித்தியடைந்த பின்னர் உதவிக்கான தகுதியைப் பெற்றது. 

MCC இன் பணிப்பாளர் சபையால், டிசெம்பர் மாதம் அபிவிருத்தி உடன்படிக்கைகளைத் தொடருவதற்காக இலங்கையானது மீள்தெரிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.