12-ஆவது நாளை எட்டிய தமிழக விவசாயிகள் போராட்டம்டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 12-ஆவது நாளை எட்டியது.

விவசாய கடன்கள் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் டெல்லிக்கு கடந்த 16-ஆம் தேதி வந்தனர்.

முதலாவது நாளே லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் நரேந்திர மோதியின் இல்லத்தை முற்றுகையிடுவதாகக் கூறி அவர்கள் பேரணியாகப் புறப்பட்டனர். ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து, போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியை விட்டு வேறு எங்கும்செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் விவசாயிகளை டெல்லி காவல்துறையினர் விடுவித்தனர்.

இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் பொதுமக்களை ஈர்க்கும் விதமாக வெவ்வேறு வித போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அது பற்றிய புகைப்படத் தொகுப்பு, உங்கள் பார்வைக்கு.

11-ஆம் நாள் போராட்டத்தில்
10-ஆவது நாள்

9-ஆவது நாள்

8-ஆவது நாள்

7-ஆவது நாள்


6-ஆவது நாள்

5-ஆவது நாள்
நான்காவது நாள்

மூன்றாவது நாள்
இரண்டாவது நாள்

முதலாவது நாள்

No comments

Powered by Blogger.