75 லட்சத்துக்கு ஏலம் போன 1500 மூடை மஞ்சள்!!

திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 1500 மூட்டைகள் ரூ. 75 லட்சத்துக்கு ஏலம் போனது. இச்சங்கத்தில் வாராந்திர மஞ்சள் மூட்டை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் பரமத்தி வேலூர்,கூகையூர்,பூலாம்பட்டி, ராசிபுரம்,ஆத்தூர்,போன்ற பகுதிகளில் இருந்து மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் 1,500 மூட்டைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

மஞ்சள் மூட்டைகளை கொள்முதல் செய்ய ஈரோடு,தருமபுரி, நாமக்கல்,ராசிபுரம்,ஆத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஏலத்தில் விரலி ரகம் ரூ. 7,769 முதல் ரூ.9,429 வரையும், கிழங்கு ரகம் ரூ.7,539 முதல் 8,344 வரையும், பனங்காளி ரகம் ரூ.12,999 முதல் ரூ. 19,699 வரையும் ஏலம் போனது. ஆக மொத்தம் 1,500 முட்டைகள் ரூ.75 லட்சத்துக்கும் ஏலம் போனது.

No comments

Powered by Blogger.