கிழக்கில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணித்து கல்வியியலாளர்களை உருவாக்குவதே எனது அடுத்த இலக்கு

தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழகம் இப்­பி­ராத்­தி­யத்தில் உரு­வாக்­கப்­பட்­டதன் கார­ண­மாக கல்­வியின் அடிப்­ப­டையில் இப்­பி­ராந்­தியம் எவ்­வாறு கல்­வியில் உயர்­வுற்­றதோ அதே­போன்று தனியார் பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றையும் நிறுவி இன்னும் கல்­வி­யா­ளர்­களை உரு­வாக்கி பிராந்­தி­யத்தை அபி­வி­ருத்தி செய்­வதே தங்­க­ளது இலக்கு என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் அரச வர்த்­தக கூட்­டுத்­தா­ப­னத்தின் தலை­வ­ரு­மான கலா­நிதி ஏ.எம்.ஜெமீல் தெரி­வித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதி­யூ­தீ­­னு­டைய பூரண அனு­ச­ர­ணை­யுடன் கலா­நிதி ஏ.எம்.ஜெமீ­லினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் 1000 மூக்­குக்­கண்­ணா­டிகள் வழங்கும் திட்­டத்தின் ஒரு அங்­க­மாக ஒலுவில் பிர­தே­சத்தில் தேவை­யு­டைய 125 பேருக்கு கண்­ணா­டி­களை வழங்­கி­வைக்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் ஒலுவில் முக்­கி­யஸ்தர் ஏ.எல்.ஜப்பார் தலை­மையில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே கலா­நிதி ஜெமீல் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஒரு பிர­தே­சத்தின் வளர்ச்சி என்­பது கல்­வியைக் கொண்டே அள­வி­டப்­ப­டு­கின்­றாது அந்த அடிப்­ப­டையில் இந்த பிர­தே­சத்தில் கற்ற சமூ­கத்தை உரு­வாக்கும் நோக்கில் மறைந்த தலை­வ­ருக்கு பக்­க­ப­ல­மாக இருந்து தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்­கினோம். இது தற்­போது நன்கு வியா­பித்து பல அறி­ஞர்­க­ளையும் கலா­நி­தி­க­ளையும் உரு­வாக்­கி­யுள்­ளது. 

பாரிய கல்வி நிறு­வனம் ஒன்று உரு­வா­வ­தற்கு எனது பங்­க­ளிப்பும் இருந்­தது என்­பதில் நான் மிகுந்த சாந்­தி­ய­டை­கின்றேன். இப்­பி­ராந்­தி­யத்தை கல்­வியின் அடிப்­ப­டையில் முன்­னேற்றும் எனது வேலைத்­திட்­டத்தை இன்னும் விஸ்­த­ரித்துக் கொண்டே வரு­கின்றேன்.

அடுத்த கட்­ட­மாக தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் பூரண அனு­ச­ர­ணை­யுடன் நமது பிர­தே­சத்தில் தனியார் பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றையும் நிறுவி அதன் ஊடாக இன்னும் பல கல்­வி­யா­ளர்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

எைன­யோர்­களைப் போல் அல்­லாது தேர்தல் காலத்­துக்கு அப்­பாலும் மக்கள் நலத்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும் என்ற கொள்­கையின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதி­யூ­தீ­­னு­டைய பூரண அனு­ச­ர­ணை­யுடன் மூக்­குக்­கண்­ணா­டிகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றோம்.

இந்த மூக்­குக்­கண்­ணா­டி­யா­னது ஏனை­ய­வர்கள் வழங்­கு­வது போன்­றல்­லாது உரி­ய­மு­றையில் கண்கள் பரி­சோ­திக்­கப்­பட்டு நீண்­ட­கா­லத்­துக்குப் பாவிக்­கக்­கூ­டி­ய­வாறு தர­மான கண்­ணா­டி­களை வழங்கிவருகின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.